Home முக்கியச் செய்திகள் இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி

இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி

0

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல்துறையினரால் வழங்கப்படும் அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version