Home இலங்கை சமூகம் யாழில் வீதி விபத்தில் பலியான பாதசாரி

யாழில் வீதி விபத்தில் பலியான பாதசாரி

0

நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ்(வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு,வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version