கிண்ணியா- குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
பாதையை கடலுக்குள் இறக்க பெக்கோ இயந்திரம் ஊடாக
முற்பட்ட வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
விபத்து
குறித்த சம்பவத்தில் சாரதி
தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
குறித்த படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண்
ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தமையும்
குறிப்பிடத்தக்கது.
