Home இலங்கை சமூகம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம்!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம்!

0

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய முறை என்ற திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான(2026) வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் அநுரகுமார திசாநாயக்க இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம்தான் எங்களுக்கு அந்நிய செலாவணியின் மிக உயர்ந்த நிகர ஆதாரமாகும்.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

வட்டி திருப்பிச் செலுத்தும் முறையின்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தி அதை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆரம்ப பணிகளை விரைவாக முடித்து 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த தேவையான பணிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டங்களுக்காக ஆரம்ப கட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிதியிலிருந்து 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்” என்றார்.

https://www.youtube.com/embed/vw-YjMOieiQ

NO COMMENTS

Exit mobile version