Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதிய இரத்து! பின்வாங்குகிறதா அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதிய இரத்து! பின்வாங்குகிறதா அரசாங்கம்

0

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓய்வூதியம் மற்றும் சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியானது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் செயல் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணத்தினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சக செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

நிறைவேற்று அதிகாரம்

இந்நிலையில் தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து இந்தத் தகவல் பெறப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தொடர்புடைய அமைச்சின் செயல் திட்டம்,நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்து, நாடாளுமன்றத்தால் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியை நியமிப்பதற்கான உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, இந்தச் சலுகைகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அரசியலமைப்புத் தடை இருப்பதாக அறிக்கை அளித்தது.

அரசியலமைப்பின் பிரிவு 36(2) சட்டத்தின்படி, “ஜனாதிபதி பதவியேற்ற பிறகு, அத்தகைய பதவியை வகிப்பவர் நாடாளுமன்றம் தீர்மானிக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு உரிமையுடையவராக இருப்பார்.

இந்த பிரிவு மற்றும் அதன் பின்னர் வரும் எந்தவொரு சட்டத்திலும் அல்லது இந்த பிரிவுக்கு முரணான எந்தவொரு விதியிலும் திருத்தம், இரத்து அல்லது மாற்றீடு பின்னோக்கிய விளைவை ஏற்படுத்தாது” என கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version