Home இலங்கை அரசியல் நாட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு அதிகரிப்பதாக மக்கள் விசனம்..!

நாட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு அதிகரிப்பதாக மக்கள் விசனம்..!

0

பொது இடங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ் கொலை அதிகரித்து வருவதாகவும்
சில இடங்களில் தமிழ் மொழி மற்றும் தெரிந்தவர்களால் அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் உள்ள பெயர் பலகை மற்றும் பொது நிகழ்வுகளில் தவறான கருத்துக்களை தரும் தமிழ் சொற்பதங்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலை என்பது நாட்டின் அதிகமான பகுதிகளில் இருந்து தமிழ் பேசும் நோயாளர்கள் வரும் ஒரு இடமாகும்.

குறிப்பாக மலையகம், கிழக்கு, வடக்கு மாகாணம் போன்ற பல பகுதிகளில் இருந்து தமிழ் மொழியை மட்டும் வாசிக்கக் கூடியவர்கள் வருகை தருவது உண்டு.

இந்நிலையில் கண்டி வைத்தியசாலையில் பல இடங்களில் தமிழ் கொலைகள் இடம் பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….

NO COMMENTS

Exit mobile version