Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் அதிகளவில் பாதிப்படைந்த கிழக்கு மாகாணம்!

சீரற்ற காலநிலையால் அதிகளவில் பாதிப்படைந்த கிழக்கு மாகாணம்!

0

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 45,420
குடும்பங்களைச் சேர்ந்த 147,885பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப்
பெருக்கினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த
நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய
வீடுகளுக்குச் சென்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (09.12.2025) தகவல் வெளியிட்டுள்ளது.

வீடுகள் சேதம் 

122 வீடுகள்
முழுமையாகவும் 2,182 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர்
உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 37,389 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946
வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து
இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர்
பிரிவுகளில் 26,009 குடும்பங்களைச் சேர்ந்த 86,685 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 727 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 08 பேர் உயிரிழந்ததுடன் 6,942 குடும்பங்களைச் சேர்ந்த
23,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 111 வீடுகள் முழுமையாகவும் 509
வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version