Home இலங்கை சமூகம் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில்
ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும் சாத்தியமற்றது என
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின்
(COPF) அண்மைய கூட்டத்தின் போது இந்த தகவல் வெளியானது.

கெசினோ ஒழுங்குமுறை

அரசாங்கம் இழந்த வரி வருவாயை மீட்டெடுக்கும் வகையில் கெசினோ ஒழுங்குமுறை
அதிகாரசபை நிறுவுவதை விரைவுபடுத்துமாறு ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்போது 2026 ஜூன் மாதத்துக்குள் இந்த அதிகாரசபை நிறுவப்படும் என்று
அதிகாரிகள் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிடம் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version