Home இலங்கை சமூகம் சாய்ந்தமருது தோணா பாலம் மீள் கட்டுமான பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

சாய்ந்தமருது தோணா பாலம் மீள் கட்டுமான பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

0

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரை வீதியை இணைக்கும் தோணா பாலம் உடைந்து விழும் ஆபத்தில்
உள்ளதால் செப்பனிட்டு அழகுபடுத்துவது பெரும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என
மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில்
அமைந்துள்ள மிக பழமையான தோணா பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து
அழகுபடுத்த முயற்சிக்கும் செயற்பாட்டை பொதுமக்கள் கண்டித்துள்ளதுடன்
குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அபாயகரமான நிலைமையையும் தெளிவுபடுத்தினர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள
இப்பாலத்தின் ஊடாக சாய்ந்தமருது வைத்தியசாலை உப தபாலகம் கமு/கமு/றியாலுல்
ஜன்னா வித்தியாலயம் அஷ்ரப் ஞாபகர்த்த பூங்கா பள்ளிவாசல் மீனவர்களின்
கட்டிடத்தொகுதி என பல்வேறு அரச தனியார் காரியாலயங்கள் வர்த்தக நிலையங்கள்
காணப்படுகின்றன.

பொதுமக்கள் கோரிக்கை 

மேலும் இப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழில்
நிமர்த்தம் காரணமாக அதிக பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் பயணிப்பதால் தற்போது இந்தப்பாலம் பலத்த
சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட
சுனாமி பேரழிவிலும் குறித்த பாலம் பாதிப்படைந்ததுடன் தற்போது உடைந்து விழும்
நிலையில் உள்ளது.

இந்நிலையில், பாலத்தின் பாதுகாப்பிற்காக உள்ள மேல் தூண்களை
மாத்திரமே அகற்றி அழகுபடுத்துவதால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகள்
இடம்பெறும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version