Home இலங்கை சமூகம் திருகோணமலையில் நில அபகரிப்பை எதிர்த்து மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

திருகோணமலையில் நில அபகரிப்பை எதிர்த்து மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

0

திருகோணமலை (Trincomalee) பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர்
பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என
கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த போராட்டமானது இன்று (28.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை : மொட்டுக் கட்சி தீர்மானம்

காணி உரித்துப் பத்திரம்

1972ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதியமைச்சராக
செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஏ எல் அப்துல் மஜீத்தால் முத்து நகர்
பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

1984இல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறைமுக அமைச்சராக இருந்த லலித் அதுலத்
முதலியால் காணி உரித்துப் பத்திரம் வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அம்மக்களுக்கு
இது வரை காணி உரித்துப் பத்திரம் வழங்கப்படாத நிலையில் துறைமுக அதிகார
சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
மக்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயம் 

தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது. சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது. 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள்
தங்களின் அன்றாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்துள்ளனர்.

துறைமுக அதிகார
சபையினர் தங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்க்கின்றனர். இதனை அரசாங்கம் நிறுத்தி ஜனாதிபதி தங்களுக்கான காணிகளுக்கான உரித்து படிவங்களை
வழங்க வேண்டும் என்றும், விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள சாரதிகளுக்கான வெற்றிடங்கள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி : அரசாங்கம் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version