Home இலங்கை சமூகம் புங்குடுதீவு பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள்: பொலிஸார் மீது மக்கள் அதிருப்தி

புங்குடுதீவு பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள்: பொலிஸார் மீது மக்கள் அதிருப்தி

0

யாழ். (Jaffna) புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு
குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு அறிவித்தல்
வழங்கியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி
மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், “குறித்த பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக கொலை செய்தல், கசிப்பு
உற்பத்தி மற்றும் வியாபாரம் என்பன இடம்பெறுகின்றன.

இது குறித்து
குறிகட்டுவானில் இயங்கும் உப பொலிஸ் நிலையத்திற்கு பலதடவைகள் முறைப்பாடு
செய்தும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

பொலிஸில் முறைப்பாடு 

பொலிஸாருக்கும்,
குறித்த குற்றச் செயல்களை செய்பவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றதா
என்ற சந்தேகமும் எழுகின்றது.

மேலும், கசிப்பு வியாபாரத்தினால் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுவதுடன் பிள்ளைகளை தனியே
பாடாசாலைக்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது.

அதுமாத்திரமன்றி, பெண்கள் வீதியில் தனியாக
நடமாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. எனவே, இதற்கு  உரிய அதிகாரிகள்
ஒரு சிறந்த தீர்வு வழங்கு வேண்டும்” என கோரியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version