Home இலங்கை சமூகம் புதிய ஐனாதிபதியிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

புதிய ஐனாதிபதியிடம் கேப்பாபிலவு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

0

புதிய ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் நடத்தியமையால் ஒரு பகுதி காணிகள்
விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் 74 குடும்பங்களை சேர்ந்த 59.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின்
கட்டுப்பாட்டில் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் காய்த்துக்கொண்டிருக்கின்றதாகவும் இதில்
வரும் வருமானத்தினை 16 ஆண்டுகளாக இராணுவத்தினர் எடுத்து வருகின்றார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவின் கருத்து 

இது குறித்த மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், “இந்த வருமானம் எங்கு
செல்கின்றது என்பது தெரியவேண்டும். வரவு செலவு திட்டத்தில் இராணுவத்திற்கு அதிகளவில் நிதி
ஒதுக்கப்பட்டு வருவதுடன் புதிய ஜனாதிபதி செலவீனங்களை குறைத்து வரும் நிலையில் எங்கள்
வருமானங்களை இராணுவத்தினர் பெற்று வருகின்றார்கள்.

கடந்த காலங்களில் எங்கள் நிலம் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகமாக காணப்பட்ட நிலையில்
தற்போது 59ஆவது படைப்பிரிவு என்ற குறுகிய இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள்.

இந்த காணிக்குள் பொதுச்சொத்தாக பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கூட்டுறவுச் சங்கம், ஆலயம், சுடலை என்பன காணப்படுகின்றது.

இறுதியாக ரணில் விக்ரமசிங்கவினை (Ranil Wickremesinghe) புதுக்குடியிருப்பில் வைத்து நாங்கள் நேரடியாக கேட்டபோது
காணியினை விடுவித்துதான் ஐனாதிபதி தேர்தல் நடக்கும் என்று சொன்னார்கள். காணிவிடுவிப்பு விடயம்
டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) கையில் கொடுத்துள்ளதாகவும் நாங்கள் அறிந்தோம்.

மனு கையளிக்கவுள்ளனர்

தயவு செய்து எங்களின் புது ஐனாதிபதியான அநுரகுமார திசாநாயக்க நல்லது செய்கின்றார். ஐனாதிபதி தேர்தலுடன் உங்கள் விடயங்கள் முடியவில்லை தொடர்ந்தும் கேப்பாபிலவு மக்களின்
காணிகளை நீங்கள் விடுவித்து தந்தால் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறவைப்போம்.

எங்கள் காணி விடயம் தொடர்பில் புதிதாக வந்துள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகம்
அவர்களிடமும் விரைவில் மனு கையளிக்கவுள்ளோம்.

நாங்கள் இன்னும் எங்கள் சொந்த இடங்களில் சந்தோசமாக வாழவில்லை. புதிய ஐனாதிபதி எங்கள்
விடயத்தினையும் தீர்த்து தரவேண்டும்.

எங்கள் கால்நடைகள் கூட மேய்ச்சல் தரவை இல்லாத நிலையில் பாரியளவிலான நிலப்பரப்பில் இராணுவத்தினர்
நிலைகொண்டிருக்கின்றார்கள். கால்நடையினை நம்பி வாழும் எங்கள் இடங்களை விடுவிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version