Home இலங்கை சமூகம் இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்…உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்…உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

0

பொகவந்தலாவ (Bogawantalawa) – கியூ தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரு நாட்களாக காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது, 43 வயதுடைய எஸ்.திருச்செல்வம் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (26) காலை 09 மணியளவில் வீட்டில் இருந்து அண்மையில் உள்ள பொகவந்தலாவ நகரத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த நபர் காலை 11 மணியளவில் தனது வீட்டுக்கு தொலைபேசியூடாக அழைத்து பேசிய நிலையில் அதன் பின்னர் அவரது தொலைபேசி செயலிழந்துள்ளது.

விசாரணை

பொகவந்தலாவ – சென் ஜோன் டிலரி பகுதியில் அவரை அறிந்தவர்கள் சிலர் இறுதியாக கண்டதாக தெரிவித்துள்ளதுடன் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நேற்றையதினம் முதல் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அத்துடன், காணாமல் போன குறித்த நபர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு உறவினர்கள் கோருகின்றனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம், 0741285831, 0761523576, 0778216579

NO COMMENTS

Exit mobile version