Home இலங்கை சமூகம் அஸ்வெசும கொடுப்பனவுக்காக காத்திருந்த மக்கள்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக காத்திருந்த மக்கள்

0

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்தின் முன்பாக (15) நீண்ட வரிசையில் காத்திருந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அஸ்வெசும தொகையை பெற்றுக் கொள்வதற்காக கடந்த நான்கு மாதங்களாக காத்திருந்ததாகவும் இதனால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அங்கு வந்திருந்த அஸ்வெசும பயனாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்வெசும கொடுப்பனவு

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றமாகவே திரும்பி சொல்லுகிறோம் அவ்வாறு நாங்கள் காத்திருந்தாலும் வீட்டுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version