Home இலங்கை சமூகம் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பேராதனை பல்கலை மாணவன்: மடிக்கணினியில் சிக்கிய குறிப்பு

விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பேராதனை பல்கலை மாணவன்: மடிக்கணினியில் சிக்கிய குறிப்பு

0

பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கண்டி – ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர் மூன்று நாட்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மடிக்கணினியில் குறிப்பொன்றினையும் எழுதி வைத்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரண விசாரணை 

கம்பஹா, ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த மாணவன் மேலும் மூன்று மாணவர்களுடன் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவனின் மரண விசாரணை நேற்று (21) மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்னவினால் நடத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கை என்ற வினோதமான திரைப்படத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், சமூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் விட்டுச்சென்ற குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அறிக்கைகள்

பேராதனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சல்கமுவ சாட்சியங்களை முன்னெடுத்துள்ளார்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன இது தற்கொலை என தீர்ப்பளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version