அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அவருக்கு கால அவகாசம் வழங்க முடியொதென சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அவ்வாறானதொரு பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(sagara kariyawassam) தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு
கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
அதிபர் தனது பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS
https://www.youtube.com/embed/fefJuWg4Ml8
Source: https://ibctamil.com/article/peramuna-not-to-support-president-ranil-1718527229
