இயக்குனர் மோகன்.ஜி-யின் திரெளபதி படத்தில் வரும் எம்கோனே என்ற பாடலை சின்மயி பாடி இருப்பதாக அறிவித்து வந்தபிறகு சின்மயியை பலரும் விமர்சித்தனர்.
அதனால் அவர் மன்னிப்பு கோரி இருந்தார். எனக்கு தெரிந்து இருந்தால் பாடி இருக்க மாட்டேன் என அவர் கூறி இருந்தார்.
பேரரசு பதில்
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி இயக்குனர் பேரரசு ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.
“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, பாடுவதற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம். கொள்கையை விட பணமா முக்கியம்?” என அவர் கூறி இருக்கிறார்.
