முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிப்பதற்கான அங்கீகாரம் மிக விரைவில் கிடைக்கப் பெறும் என வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கடிதம் அனுப்புவதற்கு முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலை ஐம்பது ரூபாவாக உள்ளது.
நட்டத்தை குறைக்கும் நடவடிக்கை
இந்த நிலையிலேயே தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையில் முத்திரையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சல் துறைக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 7,000 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.