Home இலங்கை சமூகம் மின்னல் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

நோர்வூட் பகுதியில் நேற்று (15) மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வான் மற்றும் அருகிலுள்ள வீடு மீது
மின்னல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அத்துடன் மின்னல் தாக்கியதில்
ஏற்பட்ட அதிர்ச்சியில் வீட்டில் இருந்த ஒருவர் தரையில் மயங்கி விழுந்து
காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு மீது மின்னல் தாக்கம்

வான் நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய
மரத்தில் மின்னல் தாக்கியதாகவும், பின்னர் வான் மற்றும் வீடு மீது
தாக்கியதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழையுடன் இடி மின்னல் தாக்கியதால் நோர்வுட் பகுதியில் திடீர் மின்
தடை ஏற்பட்டதாகவும் நோர்வுட் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version