Home இலங்கை அரசியல் அநுர கட்சிக்கு பேரிடி: பொதுமன்னிப்பு விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை

அநுர கட்சிக்கு பேரிடி: பொதுமன்னிப்பு விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை

0

சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பொது மன்னிப்பு மூலம் விடுதலை பெற்ற அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்க உதவியவர் என்ற கருத்து அந்தப் பகுதியில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்தை அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இந்த முறை பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து அந்தப் பகுதி மக்களிடையே பலத்த சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பு

இந்த நிலையில், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விட்டு, அரசாங்கம் அதிலிருந்து கை துடைத்துக் கொள்ள முடியாது என ரோஹண பண்டார கூறியுள்ளார்.

அதன்படி, மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை சரிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version