Home இலங்கை சமூகம் கடத்தல் மன்னன் ஷிரான் பாஷிக்கின் மகன் கைது!

கடத்தல் மன்னன் ஷிரான் பாஷிக்கின் மகன் கைது!

0

நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் God father எனக் கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படை

வெள்ளவத்தை (Wellawatte) அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்ற, குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து டுபாயிற்கு தப்பியோடிய நாதின் பாஷிக் தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/person-arrested-at-katunayake-airport-1724816348

NO COMMENTS

Exit mobile version