Home இலங்கை குற்றம் கொழும்பில் பயங்கரம்: கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

கொழும்பில் பயங்கரம்: கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

0

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (04.10.2024) இரவு புறக்கோட்டை என்.எச்.எம் அப்துல் காதர் வீதியில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த நபர் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் எனவும் அவர் கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

குறித்த நபர் வீதி ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர், அவரை திடீரென கூரிய ஆயுதத்தால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/person-being-attacked-by-a-sharp-weapon-in-colombo-1728106351

NO COMMENTS

Exit mobile version