Home இலங்கை சமூகம் அம்பாறையில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

அம்பாறையில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு..!

0

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர், தியேட்டர் வீதியைச் சேர்ந்த ஜிப்ரி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

உயிரிழந்த நபர் அல்லிமூலை மல்கமபிட்டி வீதியால் அதிகாலை வேளை பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/person-died-attacked-by-an-elephant-in-ampara-1724148435

NO COMMENTS

Exit mobile version