Home இலங்கை சமூகம் யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு

யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு

0

யாழில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தான்குடியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமை
புரிந்து வருகின்றார். இந்நிலையில் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்தவேளை
நேற்றிரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

மரண விசாரணைகள்

இவ்வாறு விழுந்தவர் மயங்கிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/person-dies-after-falling-from-bed-in-jaffna-1726695922

NO COMMENTS

Exit mobile version