கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
வெவ்வேறு பெயர்கள்
இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
