Home இலங்கை குற்றம் வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை

வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை

0

வவுனியா (Vavuniya)- சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில்,  சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய
வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று
வரும் நிலையில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று இரவு 11:30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அருகில் வந்து
கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப
கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து,  சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்டவரின் மைத்துனர் ஈச்சங்குளம்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ,இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version