Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் இறைச்சிக்காக மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது

புதுக்குடியிருப்பில் இறைச்சிக்காக மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக பொதுமக்களின் மாடுகளை திருடிய
குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (20.10.2024) இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நீண்டநாட்களாக
பொதுமக்களின் மாடுகளை திருடி இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு பொலிஸார்

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மூவரை சந்தேகத்தின்
பெயரில் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/persons-arrested-on-the-charge-of-stealing-cows-1729455556

NO COMMENTS

Exit mobile version