Home இந்தியா பெட்ரோல் விலை உயர்வு – அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வு – அரசுக்கு உதயநிதி கடும் கண்டனம்

0

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.

மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Source: https://ibctamil.com/article/petrol-and-diesel-prices-hike-updates-in-india-1778907644

NO COMMENTS

Exit mobile version