Home இலங்கை சமூகம் மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

0

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கோ அல்லது தரம் குறைந்த மருந்துகளோ இல்லை என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க (Manoj Weerasinghe) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மருந்து மாபியா

மருந்து கொள்முதல் செயல்பாட்டில் உள்ள சிக்கல்களுக்கு தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாட்டில் மருந்து மாபியா ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி (Hansaka Wijayamuni) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version