Home இலங்கை சமூகம் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்யும் பிள்ளையான் – அநுர: தமிழர் தரப்பு காட்டம்

மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்யும் பிள்ளையான் – அநுர: தமிழர் தரப்பு காட்டம்

0

ஜே.வி.பி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி கட்சியினரிடையே ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் படுகொலை

“யுத்த காலத்தில் தென்னிலங்கையிலும் வடக்கு – கிழக்கில் அப்பாவி மக்களையும் படுகொலை செய்த பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய இரு கட்சிகளையும் தேர்தல் ஆணையாளர்  தடைசெய்ய வேண்டும் என்பதுடன் விசாரணை செய்யவேண்டும்.

அதேவேளை சர்வதேச ரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைசெய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்துவருவதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

அதற்கு அடுத்தநாள் பிள்ளையான் ஊடகங்களுக்கு, தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜே.வி.பி.யினர் எனவும் மக்களை கொலை செய்வதற்காக திருப்பி கேட்டபோது அதனை நாங்கள் வழங்கவில்லை என்றும் கூறினார்.

இரண்டு தரப்பும் இரண்டு அரசியல் கட்சிகள். இவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.

ஆனால் இவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஜனநாயத்தை காட்டிக் கொண்டு ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ள விடயம் அப்பட்டமாக ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதை உறுதிபடுத்துகின்றது” என தர்மலிங்கம் சுரேஸ் விளக்கமளித்தார்.

  

NO COMMENTS

Exit mobile version