Home இலங்கை குற்றம் பிள்ளையான் கைதின் பின் முதன் முறையாக கசிந்த கைது விபரம்..!

பிள்ளையான் கைதின் பின் முதன் முறையாக கசிந்த கைது விபரம்..!

0

கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய உண்மைகள் வெளி வந்து கொண்டிருந்தன. 

இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக பிள்ளையான் குறித்த பரபரப்பு நிலைத்தன்மை குறைவடைந்ததாக உணரப்பட்டது. 

எனவே, பிள்ளையான் தொடர்பிலான விசாரணைகள், நடவடிக்கைகள் பரபரப்பை இழந்து விட்டனவா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுப்பப்படும் போக்கு உள்ளது. 

இதற்கிடையில், பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை தீவிரமாக விசாரித்து வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கர்தினால் மல்கம் ரஞ்சித் திருப்திப்படும் அளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி பற்றிய முக்கிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார். 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version