பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றில் பல மணிநேரம் பேசிய ஜே.வி.பியினர்(jvp) இன்று அதே சட்டத்தால் பிள்ளையானை(pillayan) கைது செய்துள்ளமை மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கடுமையாக போராடிய ஜே.வி.பியினர், இன்று அதே சட்டத்தை பிள்ளையானுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்.”
பிரசாரங்களை முன்னெடுத்த போதிலும் சிஐடி க்கு செல்லவில்லை
“ ஊடகங்கள் எம்மை கடுமையாக விமர்சித்தன. சில ஊடகங்கள் சேறுபூசும் வகையில் பிரசாரங்களைக்கூட முன்னெடுத்தன. ஆனால் நாம் சிஐடி க்கு செல்லவில்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் ஒன்லைன் சட்டமூலத்தின் பிரகாரம் சிஐடியில் முறைப்பாடு செய்கின்றனர்.
அதேபோல பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் கதைத்தனர். எதிராக வாக்களித்தனர். இன்று அதே சட்டத்தின்கீழ் பிள்ளையானை தடுத்து வைத்துள்ளனர்.
மாற்றம் எப்படி உள்ளது
மாற்றம் எனக் கூறியே இளைஞர்கள் வாக்களித்தனர். தற்போது மாற்றம் எப்படி உள்ளது. ஏனைய கட்சிகள்கூட செய்யாத கீழ்த்தரமான வேலைகள் இந்த ஆட்சியின்கீழ் செய்யப்படுகின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.
