Home இலங்கை குற்றம் பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

அதிரடியாக கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு இன்று (18) கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Source: https://tamilwin.com/article/pillayan-s-driver-arrested-in-a-sting-operation-1744988905

NO COMMENTS

Exit mobile version