Home உலகம் அமெரிக்காவில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : இருவர் பலி பலர்காயம்

அமெரிக்காவில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : இருவர் பலி பலர்காயம்

0

அமெரிக்காவின்(us) கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதிய விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் காவல்துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட என்ன காரணம் 

விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.   

அண்மையில் ரஷ்யா நோக்கி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.இந்த விமானம் ரஷ்யாவால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அஸர்பைஜான் ஜனாதிபதி வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதேபோன்று தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 179 பேர் பலியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/_U79GcRbQ3M

NO COMMENTS

Exit mobile version