மெக்சிகோவிலிருந்து பறந்து கொண்டிருந்த மருத்துவ விமானம் கால்வெஸ்டன் விரிகுடா அருகே நேற்று (22) விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மருத்துவ நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த மெக்சிகன் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் பயணித்தவர்களில் ஒரு குழந்தை உட்பட
நான்கு பேர் கடற்படை அதிகாரிகள் மற்றும் நான்கு பேர் பொதுமக்கள் ஆவர்.
அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து
விபத்தில் இறந்த ஐந்து பேரில் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக மெக்சிகன் கடற்படை தெரிவித்துள்ளது.
கால்வெஸ்டன் பகுதியில் ஏற்பட்ட அடர்ந்த மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மெக்சிகோவின் கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
