Home இலங்கை அரசியல் மோடியை சந்திக்கச் சென்ற தமிழ்க் கட்சிகளுக்கு நடந்த மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்

மோடியை சந்திக்கச் சென்ற தமிழ்க் கட்சிகளுக்கு நடந்த மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்

0

கடந்த 05ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழர் தரப்பு சார்பில் மூன்று பிரதான கட்சியினர் சந்தித்தனர். 

இந்நிலையில், இந்த சந்திப்பின் பின்னர், அது தொடர்பான கருத்துக்களும் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்களும் பலர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன எனலாம். 

அத்துடன், அச்சந்திப்பின் நடைமுறைகள், பிரதமர் நரேந்திர மோடியால் தமிழர் தரப்பு புறக்கணிக்கப்பட்டதா அல்லது தமிழர் தரப்பு மோடியை சந்திக்க தயார் நிலையில் இல்லையா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

காரணம், இந்திய பிரதமருடனான சந்திப்பின் போது குறித்த தமிழ் அரசியல்வாதிகளின் இருக்கை நடைமுறை கூட ஒழுங்குபடுத்தவில்லை என்பது போல் தோற்றமளிக்கின்றது. 

இது கடந்த காலங்களில் தமிழர் தரப்பிலான அரசியலில் பின்பற்றப்பட்ட இராஜதந்திர நடைமுறைகளுக்கு முழுவதும் மாறுபட்ட ஒன்றாக தெரிகின்றது. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version