இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள பொடி லெசி, இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவான போதைப் பொருள் வர்த்தகரும், பிரபல பாதாள உலகப் புள்ளியுமான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்க, இந்தியாவின்(India) மும்பை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
சர்வதேச இன்டர்போல் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ள நிலையில், நீண்ட காலம் தடுப்புக் காவல் மற்றும் விளக்கமறியலில் இருந்த பின்னர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பொடி லெசி, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கைது
எனினும், அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இலங்கையில் இருந்து இரகசியமாக தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர் இந்தியாவில் தலைமறைவாக பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அவர் இந்தியாவின் மும்பை நகரில் வைத்து தற்போது இன்டர்போல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.