Home இலங்கை சமூகம் பருத்தித்துறை சந்தை விவகாரம்: தவிசாளரின் அதிரடி முடிவு

பருத்தித்துறை சந்தை விவகாரம்: தவிசாளரின் அதிரடி முடிவு

0

பருத்தித்துறை நகரசபையின் புதிய சந்தை இன்று (14.11.2025) மதியம் 12 மணியுடன்
மூடப்பட்டுள்ளது.

புதிய சந்தையில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நேற்றையதினம்
வியாபாரிகள் பருத்தித்துறை நகரிலுள்ள நவீன சந்தை தொகுதிக்கு சென்றிருந்த
நிலையில், நேற்று பருத்தித்துறை தவிசாளர் தலமையில் 8 நகரசபை உறுப்பினர்களுடன்
பருத்தித்துறை வர்த்தகர்களும் இடையில் அவசர கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

அதில் வர்த்தகர்கள் புதிய சந்தைக்கு சென்று வியாபாரம் செய்யமாட்டோம் என
விடாப்பிடியாக நின்ற நிலையில் இன்று பிற்பகல் 12 மணியுடன் புதிய சந்தையை மழை
காலம் முடியும்வரை தற்காலிகமாக நவீன சந்தை தொகுதியில் இயங்கவுள்ளது.

வர்த்தகர்களுடன் சந்திப்பு

இதேவேளை, யாராவது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தாம்
தவறான முடிவெடுக்கப் போவதாக கூறி வியாபாரிகள் மண்ணெண்ணெயுடன் வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்றையதினம் பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் தொடர்பாக
பருத்தித்துறை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மழை காலத்தில் மிருகங்கள் கூட மழை நீர் தேங்காத இடத்திற்கு தான் செல்லும் எனவும் இந்த ஜனநாயக நாட்டில் பருத்தித்துறை நகரப்பகுதி சந்தையில் வியாபாரம் செய்யும் மக்களுக்கு இந்த சுதந்திரம் கூட இல்லை எனவும் சந்திப்பில் கலந்துகொண்ட நகர சபை உறுப்பினர் ஜெய கோபி கவலை
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version