எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் ஓட்டுநர்களுக்கு அபராதப் புள்ளிகளை வழங்கும் புதிய முறையொன்றை கொண்டுவர விரும்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இன்று (20.11.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகன சாரதிகளுக்கு அபராதப் புள்ளிகளை வழங்கிய பிறகு அதிகபட்ச புள்ளிகள் வரம்பை மீறினால் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது இரத்து செய்வது பல நாடுகளில் உள்ள ஒரு நடைமுறையாகும்.
ஒன்லைன் அபராதங்கள்
இலங்கையில் இதேபோன்ற ஒரு முறையை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது பல பகுதிகளில் செயற்பட்டு வரும் வாகன அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
