நான்கு கோடி ரூபாய் பெறுமதியான “குஷ்” போதைப்பொருட்களை தங்களுடைய பயணப்பொதிகளில் மறைத்து வைத்து நாட்டிற்கு வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து விட்டு வெளியேறிய பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
[KEQ8W9P
]
போதைப்பொருள் கையிருப்பு
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதிகள் என தெரியவந்துள்ளது.
அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளில் நான்கு பொதிகளாக தயார்படுத்தப்பட்ட நான்கு கிலோ 22 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
