கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (15.12.2025) இடம்பெற்றுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பினை
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பு
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 125 லீட்டர் சட்டவிரோத கசிப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளின் பின் போலிஸ் பினையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
