வவுனியா (Vavuniya), ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த
கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த முற்றுகை நடவடிக்கை நேற்று (21.12.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35
வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீராட சென்று உயிரிழப்பு
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லி லீற்றர் கோடா
மற்றும் 150,000 மில்லி லீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன் ஒரு இலட்சம்
ரூபா பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நேற்று (21) வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை
அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, பல இளைஞர்கள் குறித்த பகுதியில் கசிப்பை அருந்திவிட்டு
அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்களில் ஈடுபடுவதுடன் கடந்த காலங்களில் அப்பகுதியில்
உள்ள நீரேந்து பிரதேசங்களிற்கு நீராட சென்று உயிரிழந்தும் உள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.