Home இலங்கை குற்றம் மன்னாரில் செய்தியாளரை தாக்கிய பொலிஸார்

மன்னாரில் செய்தியாளரை தாக்கிய பொலிஸார்

0

மன்னார் – அடம்பன் பொலிஸார், ஈச்சளவக்கை பெரியமடு பகுதியில் நேற்று 31.05.2025
மாலை 3:30 மணியளவில் பெரியமடு பள்ளமடு வீதியூடாக சுயாதீன ராயூகரன் என்ற ஊடகவியலாளரை தாக்கியுள்ளனர். 

காணொளி 

குறித்த ஊடகவியலாளர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஈச்சளவக்கை மீனாட்சி அம்மன்
ஆலயத்திற்கு முன்பாக வீதியில் அடம்பன் பொலிஸார், முச்சக்கர வண்டியை நிறுத்தி
ஈச்சளவக்கையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர். 

இதன்போது, இதனை கண்ட ஊடகவியலாளர், தனது தொலைபேசியில் காணொளி எடுத்த நிலையில், பொலிஸார் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், அந்த ஊடகவியலாளரின் தொலைபேசியை பறித்து காணொளியையும் பொலிஸார் அழித்து விட்டதாக கூறப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/police-brutally-attack-journalist-in-mannar-1748737991

NO COMMENTS

Exit mobile version