Home இலங்கை சமூகம் யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு!

யாழில் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைப்பு!

0

 யாழ்ப்பணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தகாத உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார்.

தகாத உறவு

இதன்போது தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தகாத உறவுக்கு வருமாறு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் வற்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தகாத உறவுக்கு வருமாறு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த தையலக பெண் ஒருவர் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெண்ணின் உறவு

இதேவேளை பெண்ணின் உறவினர் ஒருவர் சம்பவம் தொடர்பான காணொளியும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்தே  தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version