யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ள நிவாரணம் கோரிய
குடும்பப் பெண் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில
குடும்பங்கள் கிராம சேவையாளர் மீது ஊடகங்கள் வாயிலாக குற்றம் சாட்டி இருந்தனர்.
இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பெண் ஒருவர் அப்பகுதி கிராம
அபிவிருத்திச் சங்கத் தலைவர் பக்க சார்பாக மக்களை வழிநடத்துவதாக குற்றம்
சாட்டியிருந்தார்.
முறைப்பாடு
இதற்கு எதிராகவே மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் இந்த செய்தியை சேகரித்த ஊடகவியலாளர் மீதும் வத்திராயன் கிராம
அலுவலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் உட்பட மக்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகின்றதா
என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
