Home இலங்கை சமூகம் மது போதையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செய்த செயல்!

மது போதையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செய்த செயல்!

0

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் மது போதையில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு மது போதையில் வீடொன்றிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் குருணாகல் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுராகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணி இடைநீக்கம்

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இரவு நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது நண்பருடன் மது அருந்திய நிலையில் மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளார்.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் பொலிஸ் கான்ஸ்டபிளை திருடன் என நினைத்து அவரை பிடித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்த பொலிஸ் கான்ஸ்டபிளை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

NO COMMENTS

Exit mobile version