Home இலங்கை சமூகம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் இடையூறு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் இடையூறு

0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி முன்னெடுத்த துண்டுப்பிரசுரம் விநியோகத்தின் போது பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர். 

குறித்த கட்சியினர் யாழ். மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்த போது அங்கு
சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறித்துள்ளனர்.

 கஜேந்திரன் பொலிஸாருடன் வாக்குவாதம் 

இதன் காரணமாக, மருதங்கேணி பொலிஸாருக்கும் அக்கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன் (Selvarasa Kajendran) பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை மீள ஒப்படைத்துள்ளனர். 

அதேவேளை, இச்சம்பவத்தினால் மருதங்கேணி
பகுதியில் சிலமணி நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version