Home இலங்கை குற்றம் பொலிஸாரால் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பொலிஸாரால் கடத்தல் முயற்சி முறியடிப்பு

0

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு
பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரத்தடிகள் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டு காட்டுப்பகுதியில் நேற்று (09.04.2025) இரவு மரத்தடிகள்
வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட நடவடிக்கையில்
1700இற்கு மேற்பட்ட காயா மரத்தடிகள் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக
காணப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின்
வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

இது
குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

Source: https://tamilwin.com/article/police-foil-timber-smuggling-attempt-1744271424

NO COMMENTS

Exit mobile version