Home இலங்கை குற்றம் கொழும்பில் சிக்கிய கைத்துப்பாக்கி குறித்து பொலிஸார் விசாரணை

கொழும்பில் சிக்கிய கைத்துப்பாக்கி குறித்து பொலிஸார் விசாரணை

0

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று
வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தக் கைத்துப்பாக்கி
கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேலதிக விசாரணைகளுக்காக
முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார்
தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version