Home இலங்கை சமூகம் வவுனியாவில் அதிகாலையில் வாள்வெட்டு: நால்வர் படுகாயம்

வவுனியாவில் அதிகாலையில் வாள்வெட்டு: நால்வர் படுகாயம்

0

வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16.08.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்

அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத
நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாள்வெட்டு
தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர்
மற்றும் அவரது மனைவி அத்துடன் மேலும் இருவர்
காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/police-investigating-the-clash-in-vavuniya-1723806729

NO COMMENTS

Exit mobile version